‘இந்தியன்2’ பட பிரச்சினையை தீர்க்க கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார். அதன்பிறகு கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் எடுக்க தயாரானார்.
ஆனால் இந்தியன்2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் அவர் மீது புகார் அளித்திருந்தது. இதையடுத்து நீதிமன்றம் இரு தரப்பினரும் பேசி ஒரு சுமுகமான முடிவை எடுக்க கூறி உத்தரவிட்டது. இருப்பினும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பிரச்சினையில் தலையிடாமல் இருந்த கமல்ஹாசன் தற்போது இதை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார். ஆகையால் பல மாதங்களாக இழுத்துக்கொண்டிருக்கும் இப்பிரச்சினை கமல்ஹாசன் தலையிட்டதால் கூடிய விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.