ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுகுளம் பகுதியில் உலகநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி-சூர்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகராறு நேற்றிரவு முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி சூர்யாவை கீழே தள்ளி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபின் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.