Categories
தேசிய செய்திகள்

Big Alert: நாடு முழுவதும் அலர்ட்…. கிளம்பிருச்சு அடுத்த ஆபத்து…. மீண்டும் பரபரப்பு செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கும், குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கும் மியூகோர்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ் தொற்று பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கண்கள் பறி போகும் வாய்ப்பு உள்ளது. கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் உயிரே போகும் என கூறுகின்றனர்.

Categories

Tech |