திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பூக்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூக்கடைகளுக்கு திருச்சியிலிருந்து மல்லிகை பூக்கள், வேளாங்கண்ணியிலிருந்து சந்தன முல்லை பூக்கள், கீரமங்கலத்திலிருந்து சம்பங்கி பூக்கள் ஆகியவற்றை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவது வழக்கம்.
இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் திருவிழாக்கள், கோவில்களுக்கு பகதர்கள் செல்ல தடை மற்றும் பூக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் பூக்களை தினமும் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் மன வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.