Categories
உலக செய்திகள்

“புதர்களுக்கிடையில் கிடந்த பெண் உடல்!”.. பின்னணி என்ன..? வெளியான தகவல்…!!

லண்டனில் புதர்களுக்கிடையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் கடந்த செவ்வாய் கிழமை அன்று ரோம்ஃபோர்ட், எசெக்ஸ் பகுதியில் இருக்கும் புதர்களின் இடையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மரியா ஜேன் ராவ்லிங்ஸ் என்ற 45 வயது பெண் தான் அது என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அதாவது அந்த பெண் கடந்த செவ்வாய் அன்று கிங் ஜார்ஜ் என்ற மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்றிருக்கிறார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்து நெரித்தும், தலையில் பலமாக அடித்தும் கொலை செய்துள்ளனர். காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதி மக்களிடம் சிசிடிவி கேமரா காட்சிகள் இருந்தால் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணிற்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறியும் முயற்சியாக பல விசாரணைகளை மேற்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் டேவிட் ஹில்லியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தால் மிகுந்த பாதிப்படைந்த மரியாவின் குடும்பத்தினருக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளார். அதாவது அந்த பெண் செல்ம்ஸ்ஃபோர்ட் என்ற பகுதியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இச்சம்பவம் தொடர்பில் தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |