ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநக காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதே தலையாய கடமை என உறுதிபட தெரிவித்தார். கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
முழு ஊரடங்கின்போது மக்களின் நடவடிக்கை கண்காணிக்கப்படும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் பெண்கள் பாதுகாப்பு, முன்கள பணியாளர்களுக்கான காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதை உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சங்கர் ஜிவால் தெரிவித்தார். ரெம்டெசிவேர் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பது உள்ளிட்ட விவரங்களில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாகவும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.