களியக்காவிளை அருகில் மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முண்டக்கல்விளை பகுதியில் தாய் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கணவரை பிரிந்து தன் வீட்டின் முன் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் தனது கடையின் அருகில் இருந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் தாயின் அருகில் வந்து நின்றுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் இருக்கக்கூடிய நபர் தாயின் கழுத்தில் இருந்த 2 3/4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுவிட்டனர்
இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த சிசிடிவி கேமராவில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள் நகையை பறித்துச் சென்றது பதிவாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.