Categories
சினிமா தமிழ் சினிமா

நமக்கு கொரோனா வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்…. பிரபல நகைச்சுவை நடிகர் ட்விட்….!!!

பிரபல நகைச்சுவை நடிகையரின் தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமாகி வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தனது தந்தையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அன்பு நண்பர்களே, இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவுகூர்ந்து மிக கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முகக் கவசம் அணி வீர்” என்று பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/Bala_actor/status/1390352073212915713

Categories

Tech |