Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி …!!!

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான, கால் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீரர் டொமினிக் திம் , அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதி, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம்  டொமினிக் திம் 4வது முறையாக , அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு கால் இறுதிச்சுற்றில் தரவரிசையில் 2ம் நிலை வீரரும், ஐந்து முறை சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் , ஜெர்மனி  வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன்  மோதினார்.

இதில் ரபெல் நடாலை 6-4, 6-4  என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ,அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். ரபெல் நடால் உடன் மோதிய போட்டிகளில் , அலெக்சாண்டர் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றுள்ளார் . இதைத்தொடர்ந்து பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில்,  பெலாரஸ் நாட்டு வீராங்கனை அரினா சபலென்கா, ரஷ்ய நாட்டு வீராங்கனை பாவ்லிசென்கோவாவை  எதிர்கொண்டு,6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Categories

Tech |