இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின், இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் போட்டியில் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய பேட்மிட்டன் குழுவை போட்டியில், பங்கு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று, மத்திய அரசு சார்பில் மலேசியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மலேசிய அரசு இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது .
எனவே இந்திய பேட்மிண்டன் போட்டியில், நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிக்கு பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இவர்களின் ஒலிம்பிக் போட்டி கனவு தகர்ந்துள்ளது . ஆனால் இந்தியன் பேட்மிட்டன் தரவரிசையில் பி.வி. சிந்து, சாய் பிரனீத் மற்றும் இரட்டையர் ஜோடி பிரிவில் சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் , ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.