மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு வரும் தண்ணீரானது விவசாய பயன்பாட்டிற்காக அப்படியே வெளியேற்றப்பட்டு பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதைவிட கூடுதலாக நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.