Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையில் சிக்கிய சுறா மீன்கள் கூட்டம்…. ஏலத்தில் விற்பனை செய்த மீனவர்கள்…. அடித்துப்பிடித்து வாங்கிய வியாபாரிகள்….!!

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாமீனை வாங்குவதற்கு விற்பனையாளர்களின் கூட்டம் அலைமோதியது.

குளச்சலில் இருக்கும் மீன்பிடி துறைமுகத்தில் 300 விசைப்படகுகள் மற்றும் 1,000 க்கும் மேல் உள்ள கட்டுமரங்களும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றன. எனவே கட்டுமர மீனவர்கள் தினசரி காலையில் கடலுக்கு சென்று சிறிய சிறிய மீன்கள் பிடித்து வந்திருக்கின்றனர். இவ்வாறு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று, பத்து நாட்களுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து உயர்ரக மீன்களை பிடித்து வருவார்கள். இந்நிலையில் நேற்று கரை திரும்பிய அவர்கள் மூன்று விசைப்படகுகளிலும் ஏராளமான சுறா மீன்கள் சிக்கியுள்ளது.

அவை ஒவ்வொன்றும் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை எடை இருக்கின்றது. அந்த மீன்களை துறைமுகத்தில் இருக்கும் ஏல கூட்டத்திற்கு கொண்டு சென்றபோது அந்த மீனை வியாபாரிகள் அடியும் பிடியுமாக வாங்கியுள்ளனர். இதுகுறித்து மீனவர் கூறியதில், ஆழ்கடலுக்கு சென்றபோது 5 டன் எடையுள்ள சுறா மீன்கள் சிக்கியுள்ளது. அந்த மீனுக்கு கேரளா மற்றும் வெளிநாடுகளில் நல்ல விலை உள்ளது. இதில் பீலி சுறாக்களுக்கு அதிக மருத்துவ குணம் இருப்பதால் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் நேற்று பிடிபட்ட மீன்கள் சாதாரண சுறாமீன் என்பதால்  உணவுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |