Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை விற்க முயற்சி செய்தபோது… வசமாக சிக்கிய இருவர்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

யானைத் தந்தங்களை திருடி விற்க முயற்சித்த இரண்டு பேரை வனதுறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் வனச்சரகதிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்கநாதர் கோவில் பீட் வனபகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. ஆனால் அந்த யானையின் தந்தங்கள் திருடப்பட்டுயிருந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் யானையின் தந்தங்களை திருடி அதனை விற்க முயற்சி செய்த குற்றத்திற்காக வனத்துறையினர் அழகப்பபுரம் கிராமத்தில் வசிக்கும் இன்பராஜ், கணேசன் ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |