Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று  பகுதியில் இருக்கின்ற மணலை  அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை  அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 6 பேரை கையும், களவுமாக காவல்துறையினர் பிடித்து விட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சிலுப்பனூர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ், பூவரசன், வைரவன், விக்னேஷ், தமிழ்ச்செல்வன், மணிகண்டன், என்பது தெரியவந்துள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய குற்றத்திற்காக  அந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததோடு அவர்கள் 6 பேரையும் கைது செய்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |