நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன் படி அரிசி நாம் அதிகம் சாப்பிடும் உணவுப் பொருள். ஆனால் அரிசியை சமைத்து பிறகு உடனே சாப்பிட்டு விடவேண்டும். அரிசியில் இயற்கையாகவே bacillus cereus என்ற பாக்டீரியாவின் முட்டைகள் இருக்கும். சமைத்த உணவை நாம் அறை வெப்பத்தில் வைக்கும்போது முட்டையிலிருந்து பாக்டீரியாக்கள் வந்துவிடும். இதனால் அரிசியில் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது.
சமைத்த பிறகு ஆரிய சோற்றில் தோன்றும் பாசிலஸ் சிரேசஸ் பாக்டீரியாக்கள் மீண்டும் சூடு செய்தாலும் அழிவதில்லை. இதனால் நாம் அந்த சோற்றை சாப்பிடும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியிடும் நச்சு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளும் உடலுக்கு ஆபத்தானவை.