புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் தென்னிந்தியாவில் முதன்முதலாக நமது மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச wifi வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி இந்திரா காலனியை அடுத்த இந்திரா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
தென் இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவசமாக வைஃபை வசதியுடன் தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் புதுசேரியில் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். முதலமைச்சர் உரையைத் தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர் தேசிய மாணவர் படை, பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடைபெற்றன. இதைதொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற சுதந்திர தினம் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.