Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு மற்றும் 5 ஆயிரம் நிதியுதவி… அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தி ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.

இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். முதல் கட்டமாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் முழு ஊரடங்கு தான் ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ள அவர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |