மாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவின் 7 குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஒரு கருவியில் இரண்டு குழந்தைகள் உருவாவது உண்டு. அதையும் மீறி சில சமயங்களில் 3, 4 கருவும் உருவாவது உண்டு. அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பது இல்லை. அதையும் மீறி அபூர்வமாக நான்கு குழந்தைகளும் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளது. அவர் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்று இருந்தபோது அங்கு இருந்த மருத்துவர்கள் கருவில் ஏழு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து அலிமாஸ் என்ற 25 வயதான அந்த இளம் பெண்ணிற்கு ஆரோக்கியமாக குழந்தை பிறக்க மருத்துவர்கள் முக்கிய கவனம் செலுத்தினர். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. அப்போது அவரது கருப்பையிலிருந்து ஒன்பது குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. இதில் 4 ஆண் குழந்தைகளும், ஐந்து பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளது சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.