து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதை தொடர்ந்து இவர் சண்டக்கோழி, திமிரு, ஆம்பள, பூஜை, இரும்புத்திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஷால் சில படங்களை தனது பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் .
Shooting of @VishalKOfficial ‘s #Vishal31 today pic.twitter.com/jEqd1dOwBo
— Vishal Film Factory (@VffVishal) May 6, 2021
சமீபத்தில் நடிகர் விஷாலின் 31-வது படத்தை இயக்குனர் து.பா.சரவணன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் விஷால், டிம்பிள், து.பா. சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.