Categories
மாநில செய்திகள்

சோகமாக மாறிய திருமணம்…. 2 பேர் பலியான சம்பவம்…!!

செங்கம் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் பல திருமணங்கள் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடி நடத்துகின்றனர். இதன் காரணமாக தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது.

இதேபோன்று செங்கம் என்ற இடத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நிச்சயதார்த்தம், ஏப்ரல் 22ஆம் தேதி திருமணமும் நடைபெற்றது. இதில் 150 பேர் பங்கேற்றனர். பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மணப் பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |