ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்று வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான , கால்இறுதி சுற்று நடைபெற்றது. இந்த கால்இறுதி சுற்றில் , நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி , 12வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனையான பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார்.
இதில் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து , அரையிறுதிச் சுற்றுக்கு ஆஷ்லி பார்ட் முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வீராங்கனை பாலா படோசா, ஸ்விட்சர்லாந்து வீராங்கனையான பெலின்டா பென்சிக்காவுடன் மோதினார். இதில் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் பெலின்டா வீழ்த்தி ,அரையிறுதி சுற்றுக்கு பாலா படோசா முன்னேறினார்.