Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நெருக்கடியை குறைக்க…. ஸ்டார் குழுமம் 50 கோடி நன்கொடை…. அவர்களே வெளியிட்ட பதிவு…!!!

கொரோனாவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை குறைக்க ஸ்டார் குழுமம் நன்கொடை அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்காக பல திரை பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் தங்களால் முடிந்த நன்கொடை உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் நெட்வொர்க் குழுமம் 50 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இதனை அவர்களே தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |