Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்போ மாடுகளுக்கு தீவனமா மாறிடுச்சு..! வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டதால் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, வேடசந்தூர், குரும்பபட்டி, அய்யர்மடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காயை அதிக அளவில் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் வெண்டைக்காய் அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டதால் மார்க்கெட்டிற்கு வெண்டைக்காய் வரத்து அதிகமானது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் வெண்டைக்காய் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். அதே சமயம் வெண்டைக்காய் அதிகம் தேக்கம் அடைந்ததால் அவை மாடுகளுக்கு தீவனமாக மாறியுள்ளது. மேலும் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |