கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்ல காலியான சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் ஏற்றி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2-வது அலையாக அதிகரித்துவரும் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் நிலவுகிறது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சீன்ஹாட் என்ற பகுதியில் ஆக்சிஜன் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று காலியான சிலிண்டர்களில் பணியாளர்கள் ஆக்சிஜனேற்றி கொண்டிருந்தபோது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில் 3பேர் பரிதாபமான நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் கலெக்டர், கூடுதல் டிஜிபி, தலைமை தீயணைப்பு அலுவலர், மருந்து ஆய்வாளர் கொண்ட குழு விசாரணை நடத்த ஒன்றிணைந்துள்ளன.