Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோடையில் கொட்டிய மழை…. அபாயத்தில் இருக்கும் பொதுமக்கள்…. எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை….!!

தேனியில் சோத்துப்பாறை அணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றபடுவதால், கரையோரத்திலிருக்கும் பொதுமக்களுக்கு 2 ஆம் கட்டமாக வெள்ள அபாயத்திற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரியகுளத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சோத்துப்பாறை என்கின்ற அணை அமைந்துள்ளது. இதனுடைய மொத்த கொள்ளளவு 126.28 அடி உயரமாகும். இந்த நிலையில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு வரும் நீரினுடைய வரத்து அதிகமானதால் அணை முழுவதும் நிரம்பியதோடு மட்டுமல்லாமல் வழியவும் தொடங்கியுள்ளது. இதனால் வராக நதியில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அந்த நதியின் கரையோரத்திலிருக்கும் பொதுமக்களுக்கு 2 ஆம் கட்டமாக வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.

Categories

Tech |