மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட மசாஜ் தெரபிஸ்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் சினோ ஹில்ஸ் பகுதியில் மசாஜ் தெரபிஸ்டான ஓமர் பலிரோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலேயே மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த திங்கட்கிழமை மசாஜ் செய்து கொள்வதற்காக ஓமர் பலிரோவிடம் வந்திருக்கிறார். அங்கு ஓமர் அந்தப் பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த பெண் இந்த சம்பவத்தை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரால் வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானதை அடுத்து போலீசார் அவரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.