விஜயின் ‘தளபதி65’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறவிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ டத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘தளபதி65’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு? எப்படி? நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சென்னையில், பிரம்மாண்ட அயல்நாட்டு ஷாப்பிங் மால்களுக்கு இணையான செட்டுகளை அமைத்து தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான ஆர்வத்தை தூண்டி வருகிறது.