புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை தலைமை செயலாளர் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை குறித்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மற்றும் சுகாதார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பங்கேற்று தொற்று தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு பற்றி எடுத்துரைத்தார். இதனையடுத்து கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியதாவது தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2500 படுக்கைகள் உள்ள நிலையில் நோய் அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.