இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பக் கூடாது எனக்கூறிய அறிவிப்புக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார்
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பல நாடுகள் போக்குவரத்து தடையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய மக்கள் அவர்கள் நாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் 5 ஆண்டு சிறை தண்டனையும் 37 ரூபாய் லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சிகள் சொந்த மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் ஆனால் ஆஸ்திரேலிய அரசு மக்களை சிறையில் அடைக்கும் நோக்கில் செயல்படுகிறது எனவும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுக்குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்பவர்களால் கொரோனா தொற்று 7 மடங்கு உயர்ந்துள்ளது என்றும் நாட்டிலுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மேம்படுத்தவும், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது தற்காலிக முடிவு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நம் நாட்டின் கொரோனா பரவலை தடுக்கும் வகையில்தான் இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.