Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…. எல். முருகன் பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். காலை 10.45 மணிக்கு ஆளுநர் மாளிகையில் மம்தா பதவி ஏற்பார். இன்று அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.

இதனையடுத்து மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் இடம் தோல்வியுற்ற மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் வன்முறை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளார். இதற்கு 6 பாஜகவினர் பலியாகியுள்ளனர். பாஜக அலுவலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.

Categories

Tech |