கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்த பட்டால் மட்டுமே தீர்வுக்கு வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா 2-வது அலையாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் இதனின் தாக்கம் சிறிதளவும் குறையத் தொடங்க வில்லை. நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை எட்டி உள்ளது.
இதுவரை இந்தியாவில் மட்டும் 2.02 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டிச்செல்கிறது. இதுவரை கொரோனாவால் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு தான் சரியான தீர்வு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், கொரோனா பரவலை முழுமையாக தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது ஒன்று தீர்வாகும். ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவிப்பு செய்து ஊரடங்கு அமல் படுத்தப்படலாம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்கள் இறக்கின்றனர் என்று ராகுல்காந்தி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.