நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரேம்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். இவர் நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
Happy birthday madam @trishtrashers 🎂 pic.twitter.com/WFy9tXHImn
— PREMGI (@Premgiamaren) May 4, 2021
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் திரிஷாவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் பிரேம்ஜி திரிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.