சுவிட்ஸர்லாந்தின் பிரபல நகரம் பாஸல், தர்மம் கேட்பவர்களுக்கு டிக்கெட் மற்றும் பணம் கொடுத்து ஐரோப்பாவில் நீங்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது.
பாஸல் நகரின் புலம்பெயர்தல் அலுவலகமானது, தர்மம் எடுப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கு டிக்கெட் எடுத்து கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் 20 சுவிஸ் பிராங்குகள் வழங்கவும் தீர்மானித்துள்ளது.
ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் சுவிட்சர்லாந்திற்குள் குறிப்பிட்ட காலத்திற்கு வர மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அதனை மீறி மீண்டும் அவர்கள் சுவிற்சர்லாந்துக்குள் வந்து மாட்டிக் கொண்டால், நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை சுமார் 31 நபர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்திருக்கிறார்கள்.