Categories
மாநில செய்திகள்

என்னுடைய தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்…. ஸ்ருதிஹாசன் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகை ஸ்ருதிஹாசனின் தந்தையுமான கமல்ஹாசன் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் இடம் வெற்றியை பறிகொடுத்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு என்னுடைய தந்தையை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |