Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும்… 116 வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளிய நோட்டா… சட்டமன்ற தேர்தல் முடிவுகள்…

நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் சுமார் 9,367 வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லாமல் நோட்டாவுக்கு வாக்களித்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் தொகுதியில் களமிறங்கிய 26 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்களும், ராசிபுரம் தொகுதியில் 3 வேட்பாளர்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 4 வேட்பாளர்களும், பரமத்தி வேலூர் தொகுதியில் 5 வேட்பாளர்களும், திருச்செங்கோடு தொகுதியில் 4 வேட்பாளர்களும், குமாரபாளையம் பகுதியில் 4 வேட்பாளர்களும் என மொத்தம் 24  வேட்பாளர்கள் மட்டுமே நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்கள் நோட்டா விட மிகவும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர்

Categories

Tech |