Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்து குவிப்பு வழக்கு”… ஆவணங்களை சமர்ப்பியுங்கள்… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இதனை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணையை சரியாக நடத்தாமல் பதிலையே கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Image result for madurai court

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் வருமானம், சொத்துக்கள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், இன்று நடைபெற்ற  விசாரணையில், லஞ்ச ஒழிப்பு இயக்குனர், தமிழக பொதுத்துறை செயலாளர் ஆகியோர் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் விசாரணை அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வழக்கை   கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் விசாரணையின்  அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொது துறை செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வைத்துள்ளனர்.

Categories

Tech |