தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னையை சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் எனவும், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.