Categories
உலக செய்திகள்

தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாத பெண்…. 30000 அடி உயரத்தில் பிரசவித்த ஆச்சரியம்…. குவியும் பாராட்டுகள்….!!

விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால்  அவர் விமானத்திலேயே பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் யூட்டா மாகாணத்தில் சால்ட் லேக் என்ற நகரில் வசித்து வரும் பெண் லவினியா மவுங்கா. இவர் கடந்த புதன்கிழமை அன்று சால்ட் லேக் நகரத்திலிருந்து ஹவாய் மாகாணத்திற்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தனது அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடுமையாக விமானத்தில் கத்தியுள்ளார்.

அந்த விமானத்தில் ஒரு மருத்துவர் மற்றும் 3 செவிலியர்கள் இருந்த நிலையில் அவர்கள் லவினியா மவுங்காவுக்கு பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இந்த பரிசோதனையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். உடனடியாக அவர்கள் விமானம் 30000 அடியில் பறந்து கொண்டிருக்கும் போதே விமான கழிவறையில் வைத்து லவினியா மவுங்காவுக்கு  பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் அவர் ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவத்தை ஜூலியா ஹன்சென் என்பவர் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக  அவர் வெளியிட்டதை அடுத்து லவினியா மவுங்காவுக்கு தனது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |