பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இவர் b இலங்கை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் களில் ஒருவராக ஜொலித்தவர். ஒருநாள் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர். 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பை கைப்பற்றி அதில் முக்கிய பங்காற்றியவர்.
ஒருநாள் போட்டியில் 2338 ரன்கள் மற்றும் 175 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.