பலத்த காற்று வீசியதால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் ஷிஜுவோக்கா மாகாணத்தில் மகினோஹாரா நகரில் பலத்த காற்று நேற்று வீசியுள்ளது. இந்த காற்று திடீரென சூறாவளியாக மாறியது. இதனால் கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்து ஓடின. மேலும் வீடுகளில் ஜன்னல்கள் நெருங்கியுள்ளது. மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். ஆனால் எந்தவித உயிர் பலியும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக வீசும் இந்த பலத்த காற்றினால் 3பேர் லேசாக காயமடைந்துள்ளனர். மேலும் 3,200 வீடுகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.