தென்காசியில் மின்னல் தாக்கி இரும்பு கடை தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்குந்தர் பகுதியில் சுரேஷ்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இரும்பு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவர் கடைக்கு பக்கத்தில் ஒரு வேப்பமரம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை இரவு நேரத்தில் அப்பகுதியில் பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அந்த கடையின் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அந்த தீயானது கடையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகள் பெட்டிகள் போன்ற பொருட்களில் பரவி எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ்ராஜன் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து உள்ளனர். இந்த விபத்தில் அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை பெட்டிகள் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.