நேற்று 29,000_த்தை தாண்டிய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 408 குறைந்து ரூ 28,608-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த 13 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து , வரலாறு காணாத உயர்வை சந்தித்த தங்கம் ரூ 30 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில் சற்று இறங்குமுகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 29,000_க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 51 ரூபாய் குறைந்து 3,576-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 1 சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28,608-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல வெள்ளி 1 கிராமுக்கு 1.60 குறைந்து வெள்ளி ரூ 47 . 40 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று தங்கத்தின் விலை 29,000-த்திற்கு அதிகமாக சென்றது குறிப்பிடப்பட்டதக்கது.