Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிப்பாவிங்களா.! ஏன் இப்படி செய்தீர்கள்… வசமாக சிக்கிய 5 பெண்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து பெண்களும் எந்த சேலையும் எடுக்காமல் சேலையை திருடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகிலிருந்தவர்கள் மற்றும் கடையில் வேலை செய்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அந்த ஐந்து பெண்களும் ஜோசப் ஸ்டாலின் ஜவுளி கடைக்கு மீண்டும் துணி எடுப்பது போல் வந்துள்ளனர். இதில் எச்சரிக்கையாக இருந்த ஜவுளி கடைக்காரர் மற்றும் அருகிலிருந்தவர்கள் இணைந்து அந்த ஐந்து பெண்களையும் சேலை திருடும் இடத்திலேயே பிடித்து அவர்களை  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த ஐந்து பெண்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் லட்சுமி, பார்வதி, நம்பிகண்ணு, சுப்பம்மாள், ஆச்சியம்மாள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் ஜோசப் ஸ்டாலின் ஜவுளிக்கடையில் இதுவரை 25 பட்டு சேலைகளை திருடி சென்றதும்  தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Categories

Tech |