இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் கருப்பம்புலம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் பக்கிரிசாமி என்பவருடைய மகன் கலியமூர்த்தி என்பவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நாச்சிகுளம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.