இன்று நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் , பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது .
இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் இந்த சீசன் ஐபிஎல் தொடரில், அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார். இதனால் இவர் அதிக ரன்களை குவித்த பட்டியலில் 331 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றியுள்ளார். தற்போது இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ராகுலுக்கு , கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது .அதில் அவருக்கு அப்பென்டிக்ஸ் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் போட்டிகளிலில் ராகுல் ,விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . அதோடு விரைவில் ராகுல் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என்று அதில் பதிவிட்டு உள்ளது. தற்போது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Praying for KL Rahul’s health and speedy recovery 🙏❤️#SaddaPunjab #PunjabKings #IPL2021 pic.twitter.com/q81OtUz297
— Punjab Kings (@PunjabKingsIPL) May 2, 2021