Categories
உலக செய்திகள்

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்…. தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 30 பேர் உயிரிழந்த சோகம்….!!

ஆப்கானிஸ்தானில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்ததில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் மாளிகை அருகே தீவிரவாதிகள் கார் முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இந்த  தாக்குதலில் விருந்தினர் மாளிகை ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அருகே இருந்த பல கட்டிடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட 30 வே பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |