பாஜக அலுவலகத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதை அடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கம் முதலே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னணி வகித்து வந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை தொகுதிகளைப் பெற்று முன்னணி வகித்து வந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 200க்கும் அதிகமான இடங்களை வென்று மம்தா பானர்ஜி ஆட்சியை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸினர் பாஜக அலுவலகம் முன்பு குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.