Categories
தேசிய செய்திகள்

Breaking: தேர்தலில் வெற்றிபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் 33 ஆயிரத்து 339 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

மேற்கு வங்கத்தில் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதுவரை 205 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றது. இதையடுத்து மேற்கு வங்கத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின் தேர்தலிலும் வேட்பாளராக களமிறங்கினார். இந்நிலையில் அவர் 33 ஆயிரத்து 339 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரத்தின் சக்ரபார்த்தியை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |