Categories
அரசியல் மாநில செய்திகள்

”சாமி கும்பிடும் போது மனசு உறுத்தும்” கார்த்திக் சிதம்பரம் பேட்டி..!!

முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும்  அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது என்ன திட்டம் கொண்டு வந்தார். அவர் இருப்பது பூமிக்குத் தான் பாரம் என்று கடுமையாக விமர்சித்தார்.

Image result for கார்த்திக் சிதம்பரம்

முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் , ஒரு முதலமைசர் சொல்ல வேண்டிய  வார்த்தையா இது.இந்தியாவுக்கு 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து ,  ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சர் என்ற பட்டம் வாங்கியவரை பற்றி ஏதோ ஒரு சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆனவர் இப்படி சொல்லலாமா ? இது அரசியல் நாகரிகமா ?அவர்  சாமி கும்பிடும் போது அவர் மனசாட்சி உறுத்தும். அரசியல் நாகரீகம் இன்றி தமது தந்தையை முதலமைச்சர் விமர்சித்துள்ளார் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

Categories

Tech |