பிரபல தொகுப்பாளர் ரக்ஷன் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் இவர் தொகுத்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ரக்ஷன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/COVihiiMYDP/?igshid=1fwku59go68qj